தடை உடையும், வரலாற்றுக் கடமையில் இருந்து தவறமாட்டோம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உறுதி

எத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த யாழ். பல்கலைக்கழகம் எழுச்சிக் கோலம் பூண்டிருக்கின்றது. பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவுச் சதுக்கத்தில் மாவீர் தினம் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

எழுச்சிக்கோலம் பூண்டது யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கம்…

விடுதலைக்காகக் களமாடி மண்மீது உறங்கும் தமிழீழ தேசப் புதல்வர்களைச் சிந்தையில் இருத்தி வழிபடுவதற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தயாரான நிலையில், அதை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

எழுச்சிக்கோலம் பூண்டது யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கம்…

சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்தூதி பதவிகளைப் பெற்றுக்கொள்ளக் காத்திருப்பவர்களும், சிறிலங்கா அரசின் சட்டங்களுக்கு அஞ்சி ஒதுங்குபவர்களும் இணைந்து மாணவர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

எழுச்சிக்கோலம் பூண்டது யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கம்…

துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகத்தில் தகுதிவாய்ந்த அதிகாரியாகக் கடமையாற்றும் பேராசிரியர் கந்தசாமியின் ஒப்பத்துடன், கடிதம் ஒன்று சகல பீடங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

நவம்பர் 27 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் எந்தவொரு நிகழ்வுகளையும் நடத்தவேண்டாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரதிகள் மாணவர் ஒன்றியத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

எழுச்சிக்கோலம் பூண்டது யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கம்…

எனினும், வரலாற்று ரீதியாக போராட்டத்தை முன்கொண்டுசென்ற யாழ். பல்கலைக்கழகம் இந்த வருடமும் தமது வரலாற்றுக் கடமையில் இருந்து தவறாது என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்