தேர்தலில் ஈழ வரைபடம் வெளிப்பட்டது- கண்டுபிடித்த கெஹலிய

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் இலங்கை விளக்கப்படத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழநாட்டு வரைபடத்திற்கும் தொடர்பிருப்பதாக ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சிங்களத் தலைவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தாலும், அந்த சிங்களத் தலைவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்கள பௌத்த மக்களின் மனங்களில் ஆழமாக இருந்த சந்தேகத்திற்கிடமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததே பிரதான பிரச்சினையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவரது பிரதேசமான கண்டியில் நேற்று (32) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வரைபடமாகப் பார்த்தால் ஈழநாட்டு வரைப்படமானது அதில் தெளிவாகத் தெரிகிறது என்பது மூடிமறைக்க முடியாத உண்மையாகும் எனவும் அவர் கூறினார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகள் சிலர் ஜனாதிபதி கோத்தபாயவின் சிபார்சின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது பொய்யானதென
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள். இன்று
விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி

About இலக்கியன்

மறுமொழி இடவும்