நடைபாதை வியாபாரத்திற்கு தடை- சுமந்திரன்

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின் போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்பி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பிகள் மாவை சேனாதிராஜா, எம் ஏ சுமந்திரன் மற்றும் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் வணிகர் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது யாழ்ப்பாணம் மாநகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிலும் யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வர்த்தக சங்கத்திற்கும் இடையே காணப்படும் முரண்பாடு நிலமைகள் தொடர்பில் பேசப்பட்டது.

இதன்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்