யேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி!

யேர்மனியில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி இருவர் பலியாகியுள்ளனர். யேர்மனியின் தமிழர்கள் அதிகமாக வாழும் நோர்த்
ரைன் வெஸ்பாலியா மாநிலத்திலத்தில் உள்ள கைன்ஸ்பேர்க் நகரில் (Heinsberg) ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர் எசன் (Essen ) நகரில் உள்ள சொக்கூம்பெட் (succumbed) என்ற இடத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1112 பேரைத் தாண்டியுள்ளது.

யேர்மனியின் மாநிலங்களில் ஒன்றான நோத் ரைன் வெஸ்பாலியா மாநிலத்தில் மட்டும் 484 பேருக்கு கொரோனா வைரல் தொற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் பேருக்கு மேல் ஒன்றுகூடும் இடங்கள், விளையாட்டு நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறு யேர்மனியின் சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேநேரம் யேர்மனியின் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதற்கான உதவித்திட்டங்களை விரைவில் அறிவிக்க உள்ளோம் என்று யேர்மனிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேநேரம் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட யேர்மனி நாட்டவர் ஒருவர் எகிப்தில் உயிரிழந்திருந்தை இங்கே குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்