சுமந்திரன் பிரசங்கத்திற்கு ஆட்களில்லை?

தேர்தல் பிரச்சார களம் யாழில் சூடுபிடித்துள்ள போதும் மக்களோ அது பற்றி அக்கறையற்றவர்களாகவே உள்ளனர்.

தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் உடுவில் தொகுதியின் இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் தி.பிரகாஸ் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் ஜவர் ‘கற்றறிந்தோர் மொழியுரைகள்’ எனும் தலைப்பில் தமது கருத்துக்களையும்இ கேள்விகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை நோக்கி முன்வைத்திருந்தனர்.எனினும் எதிர்பார்ப்பிற்கு மாறாக மிகக்குறைந்த ஆதரவாளர்களே நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

ஆயினும் பெண்களாக பார்வையாளர்களாக வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள அம்பிகா,சசிகலா உள்ளிட்ட நால்வர் மட்டுமே சுமந்திரனின் பிரசங்கத்தை எதிர்பார்த்து வந்திருந்தனர்.

ஆண் ஆதரவாளர்களும் நூறிற்கும்; குறைவானவர்களே பங்கெடுத்திருந்த நிலையில் பெண்கள் இடங்களை நிரப்ப அவர்கள் முன்னிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்