ஆனையிறவில், ஒரே இரவில் மூவாயிரம் படையினரை கொன்றொழித்தோம் – தமிழினத் துரோகி கருணா

யுத்தத்தின்போது ஒரே இரவில் இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் வரையான சிறிலங்கா படையினரை தாம் கொன்றொழித்தார் என தமிழினத் துரோகி கருணா தெரிவித்துள்ளார்.

சிங்கள அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாக இருந்துகொண்டு, தேர்தலில் போட்டியிடும் அவர் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்வதற்காகவே இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவை விட கருணா அபாயமானவர் என கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் இராணுவத்தினரை நாம் கொன்றொழித்தோம்.

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அதை நான் நிராகரித்துவிட்டேன். தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லவே விரும்புகின்றேன். – எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவரது இந்தக் கருத்துக்கு எதிராக தென்னிலங்கையில் பெரும் அமளிதுமளி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அமளிதுமளி கோத்தபாய தரப்பின் அமோக வெற்றிக்கு வழிவகுக்கும் எனவும் கிழக்கு மாகாண மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருணா இப்போதும் சிங்களவர்களின் கைப்பொம்மையாகவே இருக்கின்றார் எனவும் விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்த துரோகியான அவரை தாம் நம்புவதற்கோ ஏற்றுக்கொள்ளவோ தயாராக இல்லை எனவும் கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்