பெரும் ஆபத்தை சந்திக்கவுள்ள அமெரிக்கா!

அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உருவாகியுள்ள ‘ஹார்வி புயல்’ வலுவடைந்துள்ளது. இந்த புயல் இன்று அல்லது நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலானது மணிக்கு 201 கி.மீ வேகத்தில் டெக்சாஸ், கார்ப்பஸ் கிறிஸ்டி நகரங்களில் பேரழிவை உருவாக்கும். மேலும் 97 செ.மீ வரை மழை பெய்யும். இந்த புயலால் 12 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் எனவும் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த ‘ஹார்வி புயல்’ பேரழிவை உருவாக்கும் என்பதால் பேரிடர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்பட்டன. கடந்த 2005 ஆம் ஆண்டு ‘வில்மா’ புயலால் ஃபுளோரிடா மாகாணம் பலத்த சேதத்துக்கு உள்ளானது.

அதன்பின் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகியுள்ள இந்த ‘ஹார்வி புயல்’ மக்கள் அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்