மன்னாரில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்

மன்னார் – வங்காலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த செபஸ்தியான் சாளியான் மார்க் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் சிறுவனின் தந்தை நேற்றையதினம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி மன்னாரில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு சென்ற குறித்த சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை என தந்தையார் தனது குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இறுதியாக வெள்ளை நீளக்கை மேற்சட்டையும், டெனிம் காற்சட்டையும் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்