முன்னணியின் தேசியப்பட்டியல் கிழக்கிற்கு?

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பட்டியல் மூலமான நியமன எம்.பி கிழக்கு மாகாணத்துக்கு அதுவும் குறிப்பாக அம்பாறை அல்லது திருகோணமலைக்கு வழங்கப்பட்டு வடக்கு கிழக்கு குரல்கள் உறுதிசெயப்படுவது காலத்தின் தேவையென குரல்கள் எழுந்துள்ளன.

இதன் மூலம் கட்சியின் யாழ்ப்பாண மைய அரசியல் நீக்கத்துக்கான தூரநோக்கான செயற்பாடாக அமையும் என்ற கோரிக்கையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை சசிகலாவுக்கு வழங்கித் தமிழரசுக் கட்சிக்குப் பாடம் புகட்ட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி எஸ் ரகுராம் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சமூகவியல் ஆய்வாளர் தெ.மதுசூதனன், இந்தத் தேசியப் பட்டியல் ஆசனத்தை கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு அல்லது அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டுமென ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

மாற்றத்தை விரும்புவதாகக் கூறுகின்ற கஜேந்திரகுமார் இந்த விடயங்கள் தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டுமென அரசியல் பத்தி எழுத்தாளரான அ.நிக்சனும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்