சசிகலா நினைத்திருந்தால் என்னை கூட முதல்வராக்கி இருக்கலாம்: டிடிவி தினகரன்

சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது அதிமுக என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா நினைத்திருந்தால் என்னை கூட முதல்வராக்கி இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். என்னை துணை முதல்வராக வேண்டும் என்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார். இரட்டை இலையை முடக்க காரணமாக இருந்தவர் ஓபிஎஸ் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று கூறிய ஓபிஎஸ்-ஐ சுயநலத்துக்காக எடப்பாடி சேர்த்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். தனக்கு பதிவி இல்லை என்பதால் அதிமுகவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டார் எனவும் கூறியுள்ளார். அடுத்த தலைமுறையினரிடம் அதிமுக வை ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்