பேருந்துச் சாரதி மீது அராலியில் வாள்வெட்டு

தனியார் பேருந்துச் சாரதி மீது இனம்தெரியாத குழுவினர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினர். அதில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அராலியில் நேற்று இரவு நடந்தது. சம்பவத்தில் அராலியைச் சேர்ந்த தெய்வேந்திரம் லோகேந்திரம்(வயது 28) என்பவர் படுகாயமடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்ற பத்துப் பேர் கொண்ட குழுவினர் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்