புதிய அரசமைப்பினூடாக தமிழர்களுக்குத் தீர்வாம்! தமிழ்க் கட்சிகளிடம் ஒப்பித்தார் ஜனாதிபதி

புதிய அரசமைப்பினூடாகத் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று இடம் பெற்றது. இந்தச் சந்திப்பின்போதே தமிழ்க் கட்சிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க. இந்தச் சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் இதன்போது தெரிவித்துள்ளார். இதற்கு, 13ஆவது திருத்தம் என்பது தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான ஒட்டுமொத்தத் தீர்வுத்திட்டம் அல்ல. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தீர்வே தமிழர்களுக்குத் தேவை என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இதற்கு, ‘தற்போது உடனடியாக அதைச் செய்ய முடியாது. அரசமைப்பில் தற்போது நடைமுறையிலுள்ள நடைமுறையிலுள்ள விடயங்களைத்தான் செய்யமுடியும். அவற்றைச் செயற்படுத்த – நிறைவேற்ற நான் நடவடிக்கை எடுக்கின்றேன். அடுத்த நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் இலங்கை – இந்திய ஒப்பந்தங்களின் அடிப்படையிலான தீர்வு வழங்கப்படும்’ என்று ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், எஸ்.ராசமாணிக்கம், ஜீ.கருணாகரன், கலையரசன், குலசிங்கம் திலீபன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்க, பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்த்தன, வன உயிரிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர். இம்.சீ.எம்.ஹேரத், சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்எம்.பீ.பீ.ஹேரத் உள்ளிட்டவர்களும் நல்லிணக்கம் தொடர்பிலான நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்