தமிழரசுக்கட்சியின் மாவை, ஆர்னோல்ட், துரைராசசிங்கம் நிதிசேர்க்க கனடா பயணம்!

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, ஆர்னோல்ட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் நிதி சேகரிக்கும் நடைபயணத்தில் கலந்துகொள்வதற்காக இன்று கனடா நாட்டுக்குப் பயணம் செய்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தென்னமரவாடி கிராம மக்களின் அபிவிருத்தித் தேவைக்காக நிதிசேகரிப்பில் ஈடுபடுவதற்காகவே குறித்த மூவரும் கனடாவிற்குப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இன்றும் நாளையும் தெருவிழா நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் நாளில் ஸ்காபரோவில் நிதிசேர் நடைபவனியும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவே இவர்கள் கனடாவிற்குப் பயணம் செய்துள்ளனர்.

இரண்டு வாரம் கனடா நாட்டில் தங்கியிருக்கும் இக்குழுவினர் அங்கு பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்