கருணா இயல்பாகவே புனர்வாழ்வு பெற்றாராம் – கேத்தபாய

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இயல்பாகவே புனர்வாழ்வு பெற்றதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

12 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்ட போதும், கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், மற்றும் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு ஏன் புனர்வாழ்வு வழங்கப்படாது உயர்பாதுகாப்பு வழங்கப்பட்டது என கொழும்பு நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த கோட்டபாய ராஜபக்ச, கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கடந்த அரசாங்கம் சில ஆண்டுகளாக பிரத்தியேகமாக புனர்வாழ்வளித்தாக குறிப்பிட்டுள்ளார்.

இதனாலேயே அவர் தற்போது முன்னேற்றமான நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்து இந்தியாவில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்தார்.

அத்துடன் அரசியலிலும் ஈடுபட்டமையினால் அவர் இயல்பாக புனர்வாழ்வு பெற்றதாக கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்