கிளிநொச்சிப் பொதுச்சந்தை துர்நாற்றம் : பொதுமக்கள் விசனம்

கிளிநொச்சி பொதுச்சந்தையில் நீண்ட காலமாகத் துர்நாற்றம் வீசி வருகின்றது.

இந்தத் துர்நாற்றத்தால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பொது சந்தையில் அமைந்துள்ள மலசலகூடம், அதை அண்மித்த பகுதிகளே இவ்வாறு துர்நாற்றத்துடன் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் புதிதாக மலசல கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், அது பாவனைக்கு கையளிக்கப்படவில்லை எனவும், 380 வர்த்தகர்கள், அங்கு வருகைதரும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்தத் துர்நாற்றத்தால் தொற்று நோய்களுக்கும், சுவாச நோய்களுக்கும் மக்கள் ஆளாகிறார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுக் பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது. அந்தவகையில், கிளிநொச்சி, திருநகர்
வடக்­கில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இட­ரால் 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து 402 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று
கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய பல கடிதங்கள் கிளிநொச்சி மாவட்ட

About இலக்கியன்

மறுமொழி இடவும்