இளம் பெண் ஒருவருக்கு தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் இரண்டு மருத்துவர்கள் கேகாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை வைத்தியசாலையில் சேவையாற்றும் மருத்துவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் இரவு கேகாலை நகருக்கு அருகில் இவர்கள் இருவரும் பெண்ணொருவருக்கு தொந்தரவு செய்துள்ளனர்.
அப்போது பிரதேச வாசிகள் சம்பவம் குறித்து விசாரித்துள்ளதுடன் மருத்துவர்களை தாக்கியுள்ளதுடன் கேகாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, மருத்துவர்கள் மது போதையில் இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மருத்துவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாகவும் மேலும், இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

