மாகாணசபைகள் கலைப்பு தொடர்பில் வடக்கு முதல்வர் கோரிக்கை!

அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு, மாகாணசபைகள் கலைக்கப்பட்டால், அதன் பின்னர் மாகாணங்களில் மேற்பார்வை அரசு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வடக்கு முதலமைச்சர், “ஒன்பது மாகாணசபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20வது திருத்தமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தல் நடத்தும் வரை – காலாவதியாகும் மாகாணசபைகளின் பதவிக்காலத்துக்குப் பின்னர், அங்கு மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

கலைக்கப்பட்ட மாகாணசபைகளை தேர்தல் நடத்தும் வரையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. இது அதிகாரப்பகிர்வு கோட்பாட்டுக்கு எதிரானது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மாகாணசபைகளின் குறிப்பாக, வடக்கு , கிழக்கு மாகாண சபைகளின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் சட்டங்களை மத்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்த முடியும் அவர் மேலும் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்