வவுனியாவில் 8 மாதக் குழந்தையின் தாய் சடலமாக மீட்பு

வவுனியா, மறவன்குளம் பகுதியில் 8மாத குழந்தை ஒன்றின் தாயார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மறவன்குளம், இரண்டாம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 25 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் ஒருவரும் இல்லாத போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு வருகை வந்த உறவினர்கள் தூக்கில் சடலம் தொடங்குவதைக் கண்டு ஈச்சங்குளம் பொலிசாருக்கு தகவல் வரங்கப்பட்டதையடுத்து சடலம் மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் 8 மாத குழந்தை ஒன்றின் தாய் ஆவார். இது தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்