பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு சுமந்திரனின் உதவியை நாடிய அரசாங்கம்!

பருத்தித்துறை அகலிப்பு துறைமுகத்தை புனரமைத்து சிறிலங்காவிலேயே மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அபிவிருத்தித்துக்குத் தடையாகவுள்ள மீனவர்களான கொட்டடி மீனவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று கொட்டடி மீனவர் சங்கக் கட்டடத்தில் சந்தித்த்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குறித்த பேச்சுவார்த்தையின்போது மீனவர்கள் தமது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினர்.

இது தொடர்பாக மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாத இக்காலப்பகுதியிலேயே, எமது கலாச்சாரத்தை அவமதிக்கும் வகையில் சிங்கள மீனவர்கள் செயற்படுகின்றனர்.

தற்போதே இந்நிலையெனில் அகலிப்பு துறைமுக அபிவிருத்தியின் பின்னர் எமது நிலை இன்னும் மோசமாகச் செல்லும்.

அத்துடன் இப்பகுதியை பௌத்தமயமாக்கும் பொருட்டு துறைமுகத்துக்கு அருகில் புத்தர் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்புத்தர் சிலை அமைத்ததுக்கு மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தபோதும் அச்சிலை அகற்றப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந் மே மாதம் பருத்தித்துறை துறைமுகத்தை நாட்டின் மிகப் பெரிய துறைமுகமாக மாற்றப்போவதாக அறிவித்த அரசாங்கம், அதன் விஸ்தரிப்புத் தொடர்பாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உலங்குவானூர்தியில் சென்று பார்வையிட்டார்.

அரசாங்கத்தின் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் கடந்த ஜூலை மாதம் மீன்பிடித்துறைமுக அமைச்சர் மகிந்த அமரவீர மீனவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.

அதன்போதும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் நேற்றைய சந்திப்பு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்