ஐநா தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் தமிழர்கள் சிங்கள மக்களால் புறந்தள்ளப்படுவர் – கோத்தாபய ராஜபக்ஷ!

ஐநா தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமானால் சிங்கள மக்களிலிருந்து தமிழ் மக்கள் புறந்தள்ளப்படுவார்கள் என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த சிறிலங்காப் படையினர் சிங்கள மக்கள் மத்தியில் கதாநாயகர்களாகப் போற்றப்படுகின்றனர்.

அவர்களுக்கெதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமானால் சிங்கள மக்களால் தமிழ் மக்கள் புறந்தள்ளப்படுவார்கள்.

அவ்வாறு சிங்கள மக்களால் தமிழ் மக்கள் புறந்தள்ளப்பட்டால் எவ்வாறு இந்த நாட்டில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒற்றுமையாக வாழமுடியும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சிறிலங்காவில்தான் முதல் தடவையாக படையினருக்கெதிராக போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்