வடக்கில் தமிழ் மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

எதிர்காலத்தில் வடமாகாணத்தில் தமிழ்மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் திரைமறைவில் காய்களை நகர்த்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அண்மையில், யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு நாள் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உயர்கல்வி மற்றும் நெஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் என உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டதும், அங்கு ஆங்கிலத்தில் மாத்திரமே கற்பிக்கப்படவேண்டுமெனவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கில மொழியில் மாத்திரம் கல்வி கற்பிப்பதால் குறித்த பல்கலைக்கழகம் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் வேறுபாடின்றிக் கல்வி கற்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் தமிழ் மொழிமூலமான பல்கலைக்கழகங்களை வடக்கு மாகாணத்தில் இல்லாமல் செய்வதற்காக அரசாங்கத்தின் காய்நகர்த்தல் செயற்பாடு எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்