முகமாலையில் கண்ணிவெடிகளைப் புதைப்பது யார்?

அண்மையில் கண்ணிவெடிகளற்ற பிரதேசமென உறுதிப்படுத்தப்பட்டு மக்களின் இருப்புக்காக கையளிக்கப்பட்ட முகமாலைப் பிரதேசத்தில் மீண்டும் மீண்டும் கண்ணிவெடிகளைப் புதைத்துவைப்பது யாரென இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் இது குறித்துத் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலைப் பகுதியில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மீண்டும் கண்ணிவெடிகளைப் புதைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதன் காரணம் குறித்து இதுவரை எந்தவிதத் தகவல்களும் வெளிவரவில்லை. இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் தமதுஅவயவங்களை இழந்து வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்