பிரித்தானியாவில் கோரவிபத்து – 7 தமிழர்கள் பலி!

பிரித்தானியாவில் கடந்த சனியன்று இடம்பெற்ற மோசமான வீதி விபத்தில் தமிழக தமிழர்கள் 7 பேர் உட்பட 8 பேர் பலியாகிய துன்பியல் இடம்பெற்றது.

இந்த விபத்துக்கு காரணமான இரண்டு கனரக வாகனங்களின் சாரதிகள் இருவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து விடுமுறைக்காக வந்த தமிழ் குடும்பங்கள் பரிஸ் ஈரோடிஸ்னி பூங்கா உட்பட்ட ஐரோப்பிய சுற்றுலா செல்வதற்காக வாகனம் ஒன்றை (மினி பஸ்) வாடகைக்கு எடுத்து பயணம் செய்தனர்.

நொட்டிங்காம் பகுதியை சேர்ந்த இந்த வாகனத்தின் சாரதியாகவும் கேரள பூர்வீகத்தை கொண்ட சிரியாக் ஜோசப் இருந்தார்

மேற்படி வாகனம் நியூபோர்ட் பேக்னெல் நகர அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த போது அது அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது பாதையில் அபாயகரமாக நின்ற கனரக வாகனத்துடன் (கொன்டெய்னர் லொறி) மோதியது. அதன்பின்னர் பின்னால் வந்த இன்னொரு கனரக வாகனங்களும் இந்த வாகனத்தின் மீது மோதியது.

இதில் மினி பஸ்சில் பயணித்த பெண்கள் உள்பட மொத்தம் எட்டு பேர் பலியாகியுள்ளனர். ஐந்து வயது சிறுமி உட்பட் இன்னும் இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வருகின்றனர்.

மேற்படி ஐந்து வயது சிறுமி பரிஸ் ஈரோடிஸ்னி பூங்காவை பார்க்க ஆவலுடன் சென்றதாக கூறப்படுகிறது.

பலியான தமிழர்கள் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோசின் ஊழியர்கள். விடுமுறையை கழிக்க பிரித்தானியாவுக்கு வந்தவர்கள்.

இந்த விபத்தில் கார்த்திகேயன் இராமசுப்ரமணியம், ரிஷி ராஜீவ் குமார், விவேக் பாஸ்கரன் ஆகிய மூவரும் பலியாகி;. மேலும் ஒரு ஊழியர் படுகாயம் அடைந்ததை விப்ரோ உறுதிப்படுத்தியது.

இந்த சம்பவத்தில் கைதான இரண்டு கனரக வாகன சாரதிகளில் ஒருவரான போலந்து சாரதி மது போதையில் இருந்தாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இவர் இன்று நீதிமன்றத்தில்; நிறுத்தப்பட்டபோது கண்ணீர் விட்டு அழுதார்.

இரண்டு சாரதிகள் மீதும் உயிரைப் பறிக்கும் வகையில் அபாயகரமான முறையில் வாகனத்தை ஓட்டியமை உட்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

About இலக்கியன்

மறுமொழி இடவும்