யாழ். மாணவர்கள் உயிரிழப்பு: ஐவர் கைது

யாழ். மண்டைத்தீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 18 மாணவர்கள் குறித்த கடற்பரப்பில் படகு சவாரி செய்திருந்த நிலையில், படகு கவிழ்ந்து 7 பேர் கடலுக்குள் விழுந்துள்ளனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் நீந்தி கரையை அடைந்துள்ளார்.

இந்நிலையில், நீந்தித் தப்பித்த மாணவன் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கடலுக்குச் சென்ற இம் மாணவர்கள், இவ்வாறு உயிரிழந்தமை யாழ்ப்பாணத்தை சோகமயமாக்கியுள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, தற்போது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்