யாழ். மண்டைதீவு படகு அனர்த்தம்: சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு!

யாழ். மண்டைதீவு, கடற்பரப்பில் படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த 6 பேரினது சடலங்களும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்றைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் பிரேத பரிசோதனையில் அவர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த மாணவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமை விபத்துக்கான காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழ். மண்டைதீவு, சிறுதீவு கடற் பகுதியில் நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றதுடன், மண்டைதீவுக்கு அருகில் உள்ள படகுத் தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற போதே மேற்படி அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, அண்மையில் யாழ்.பண்ணை குருசடி தீவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்