இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் மாணவன் ஒருவன் பிரித்தானியாவில் மகத்தான சாதனை படைத்துள்ளான்.
இலங்கையைச் சேர்ந்த கிரிஸ் கோபிகிரிஷ்ணா என்ற மாணவனுக்கு பிரித்தானியாவின் பிரபல காற்பந்தாட்டக் கழகம் ஒன்றில் விளையாட வாய்ப்புக் கிடைத்துள்ளது.
பிரித்தானியாவிலுள்ள காற்பந்து கழகம், கிரிஸ் கோபிகிரிஷ்ணாவை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொண்டுள்ளது.
இதன்மூலம் 9 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஒப்பந்தத்தில் இலங்கை மாணவனுக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பிரித்தானியாவின் 9 வயதுக்குட்பட்ட தொழில்முறை அணியில் முதல் இலங்கை வீரராக கிரிஸ் கோபிகிரிஷ்ணா தெரிவாகி உள்ளார்.
கிரிஸ் கோபிகிரிஷ்ணாவின் பெற்றோர் மட்டக்களப்பு கல்லாறு பகுதியில் இருந்து 2006ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்றுள்ளனர்.
இது அற்புதமான விடயம். இவ்வாறான ஒப்பந்தம் ஒன்று இதுவரையில் யாருக்கும் கிடைக்கவில்லை.
பிரித்தானியாவின் பிரதான கழகத்தில் கோல்கீப்பராக இலங்கையைச் சேர்ந்த வீரன் மாத்திரமே ஒப்பந்தம் பெற்றுள்ளார்.

