முள்ளியவளை விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – முள்ளியவளை புதரிகுடாப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தண்ணீரூற்று, ஊற்றங்கரையைச் சேர்ந்த து. நிசாந்தன் (வயது 34) என்ற சமுர்த்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை புதரிகுடாப் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்றில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் இருவர் பயணம் செய்தனர்.

ஒருவர் வாகனத்தை செலுத்தியுள்ளதுடன், அருகில் இருந்தவர் தவறி விழுந்ததில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்