தமிழீழத் தேசியத் தலைவரை தவறாகப் பேசிய பொலிஸ் அதிகாரி – மக்கள் கடும் எதிர்ப்பு!!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றித் தவறாகப் பேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர்.

இதனால் அவர்களை அமைதிப்படுத்திச் சாந்தப்படுத்தும் நிலை ஏற்பட்டது. சம்பவம் வடமராட்சி கொற்றாவத்தை என்ற இடத்தில்நிகழ்ந்தது.

பொலிஸாரின் நடமாடும் சேவையிலேயேஇந்தச் சம்பவமும் இடம்பெற்றது.

வடமராட்சி கொற்றாவத்தைப் பகுதியில் பொலிஸாரின் நடமாடும் சேவை இரண்டு தினங்கள் இடம்பெற்றது. அதன் முதல் நாளான நேற்று முன்தினம் ஆரம்ப விழா இடம்பெற்றது.

நிகழ்வில் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்வில் அவர் அங்கு உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில் அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைப்பற்றியும் அதன் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகளைப் பற்றியும் வசைபாடினார்.

அவருடைய பேச்சை அடுத்து நடமாடும் சேவையில் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் கொந்தளித்ததுடன் பேச்சு மேடையில் இருந்து உடனடியாக அவரை வெளியேறுமாறு கூச்சலிட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

நீண்ட நேரத்தின் பின்னர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸார் இணைந்து மக்களைச் சமாதானப்படுத்தினர்.

நீண்ட நேரத்தின் பின்னர் நிலமை சுமுகமடைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்