இரணைதீவு மக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைக்கு கடற்படை இணக்கம்

கிளிநொச்சி இரணைதீவு காணி விடுவிப்பின் முதற்கட்டமாக காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதான கடற்படைத் தளத்தில் இன்றைய தினம் இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினருடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது முதலில் இரணைதீவு காணிகளை விடுவிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த காணியை விடுவிப்பது தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளதென்றும் எனினும் இரணைதீவு மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில், இரணைதீவு காணி விடுவிப்பின் முதற் கட்டமாக காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதேச செயலாளர், நில அளவை திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் இரணைதீவிற்கு சென்று காணிகளை அடையாளப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்