இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் சம்பந்தன், சுமந்திரனுக்கு முன்வரிசையில் இடம்!

நேற்று(31) ஆரம்பித்துள்ள இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடு நேற்று (31) மாலை சிறிலங்கா பிரதமர் இல்லம் அமைந்துள்ள அலரிமாளிகையில் ஆரம்பித்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் இன்று தனி விமானத்தில் கொழும்பை வந்தடைந்தார்.

இதனையடுத்து இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கினை சிறிலங்காப் பிரதமர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

இந்தக் கருத்தரங்கில் சுஸ்மா ஸ்வராஜ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சீஷெல்ஸ் துணை அதிபர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

35 நாடுகளைச் சேர்ந்த 150 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருக்கு முன்வரிசையிலும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு இரண்டாவது வரிசையிலும் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ போன்றவர்களுக்கு மூன்றாவது வரிசையிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்