கடந்த காலத் தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது மகிந்தவிடம் சம்பந்தர் இடித்துரைப்பு

கடந்த காலத்­தில் விடப்­பட்ட தவ­று­கள் மீண்­டும் நடந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தைத்­தான் மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் எடுத்­துக்­கூ­றி­னேன் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் கேள்வி எழுப்­பி­னார்.

‘‘எனது ஆட்­சிக் காலத்­தில் சம்­பந்­தன் இப்­படி வந்து மனம்­விட்­டுப் பேசி­யி­ருந்­தால் பல பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்­தி­ருக் க­லாம்’’ என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கூறி­யமை தொடர்­பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும் எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும் இடை­யி­லான சந்­திப்பு கொழும்பு, விஜே­ராம மாவத்­தை­யில் அமைந்­துள்ள மகிந்­த­வின் இல்­லத்­தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மாலை நடை­பெற்­றது.

இந்­தச் சந்­திப்­பில் பேசப்­பட்ட விட­யங்­கள் தொடர்­பாக இரா.சம்­பந்­தன் தெரி­வித்­த­தா­வது:இது நல்ல சந்­திப்பு. ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் கருத்­துக்­க­ளைப் பரி­மா­றி­னோம். மகிந்த ராஜ­பக்­ச­வின் அழைப்­பி­லேயே இது நிகழ்ந்­தது.

அண்­மைக் கால­மாக இதற்­கான ஏற்­பா­டு­கள் இருந்­தன. இப்­போ­து­தான் சந்­திப்பு சாத்­தி­ய­மா­யிற்று. பல விட­யங்­கள் குறித்­துப் பேசி­னோம். தற்­போ­தைய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­கள் குறித்து நான் எடுத்­து­ரைத்­தேன்.

புதிய அர­ச­மைப்­புக்கு ஆத­ர­வ­ளிக்­க­வேண்­டும் என அவ­ரி­டம் வலி­யு­றுத்­தி­னேன். இரண்டு முதன்­மைக் கட்­சி­க­ளும் ஒன்­று­சேர்ந்து நாட்­டின் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்­து­வைக்க முன்­வந்­துள்­ளன, பிள­வு­ப­டாத ஒரு நாட்­டுக்­குள் ஒரு­மித்த தீர்வு காணப்­பட ஏது­நிலை உரு­வா­கி­யுள்­ளது, மக்­கள் ஒரு­வித எதிர்­பார்ப்­பு­டன் உள்­ள­னர் என்­பதை எடுத்­துச் சொன்­னேன்.

நீங்­க­ளும் உங்­க­ளது பத­விக்­கா­லத்­தில் பல முன்­மொ­ழி­வு­க­ளைச் செய்­தி­ருக்­கி­றீர்­கள் என்­றும் சுட்­டிக்­காட்­டி­னேன். இப்­போது உங்­க­ளி­ன­தும் உங்­கள் கட்சி சார்ந்த தலை­வர்­க­ளி­ன­தும் ஒத்­து­ழைப்பு தேவைப்­ப­டு­கி­றது என்­பதை வலி­யு­றுத்­திக் கூறி­னேன்.

எல்­லா­வற்­றை­யும் செவி­ம­டுத்­தார். கடந்த காலத்­தில் விடப்­பட்ட தவ­று­கள் மீண்­டும் நடந்­து­வி­டக்­கூ­டாது என்­பதை நான் அவ­ருக்கு சொல்­லி­யி­ருக்­கி­றேன். இந்­தக் கரு­மங்­க­ளுக்கு ஒத்­து­ழைக்க வேண்­டி­யது அவ­ரின் கடமை என்­ப­தை­யும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றேன் — என்­றார் சம்­பந்­தன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்