‘உங்களைக் காப்பாற்றிக்கொள்ளவா ஓட்டு போட்டோம்?’ – கொதிக்கும் இயக்குநர் கௌதமன்

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அரியலூரில் அனிதாவின் ஊரான குழுமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அனிதாவின் உடலுக்கு கௌதமன் அஞ்சலி செலுத்தினார்.

அவரிடம் பேசினோம்,”எங்களுக்கான மருத்துவ இடங்களை நாங்கள் இழந்து நிற்கிறோம். ஆசியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள், எங்கள் தமிழ் மாணவர்கள்தான். எங்கள் வீட்டுப் பிள்ளை இறந்த பிறகு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 7 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா? அடுத்ததாக பொறியியல் மற்றும் சட்டப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு வர இருக்கிறது. இனி எங்கள் பிள்ளைகள் நீதிபதியாக முடியாது. வக்கீலாக முடியாது. வேறு சமூகத்தினர்தான் அந்த இடத்துக்கு வருவார்கள்.

நன்றி விகடன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்