பொன்சேகாவே யுத்த நடவடிக்கைகளுக்கு கட்டளையிட்டார்: ஜகத் ஜயசூரிய

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தான் இறுதி யுத்தத்தின்போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டளைகளைப் பிறப்பித்தார் என ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களினால் தனது நற்பெயருக்கு பாரிய அபகீர்த்தி ஏற்படுத்தப்படுவதாகவும், அரசாங்கம் உடன் தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சின் செயலாளரைச் சந்தித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து முறையிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வன்னி இராணுவ முன்னெடுப்புக்களின் போது படையினருக்கு கட்டளைகளைப் பிறப்பித்தது, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தான் என்பது நாட்டு மக்களுக்க தெரிந்த விடயம் எனவும், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சரத் பொன்சேகா இது குறித்து வெளிப்படுத்தி வந்துள்ளார் எனவும் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்