பதவிக்காக நீதிமன்றத்தை நாடினார் டெனிஸ்வரன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து சட்டவிரோதமாக நீக்கியமைக்கு எதிராகவே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்ததாக பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டதை இடைநிறுத்துமாறு வலியுறுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த மனுவில், வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன், கே.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதற்கான முழுமையான காரணங்களை நாளை மன்னாரில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்