மக்கள் விரும்பும் தீர்வை கோராது, தாம் விரும்பிய தீர்வை த.தே.கூ ஏற்க போவதாக சுரேஷ் குற்றச்சாட்டு.

வர போகின்ற புதிய அரசியல் சாசனம் வடக்கு கிழக்கு இணைப்புடன் கூடிய, மும்மொழிகளிலும் ஒற்றையாட்சி அற்றது என பொருள் படும் வகையில் அமைய வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அரசியலமைப்பு முயற்சிகளை எமது முன்னைய தலைவர்கள் எவ்வாறு அணுகினார்கள் என்பதனை தற்போது உள்ளவர்கள் பார்க்க வேண்டும் என சுமந்திரனின் கருத்துக்கு பதிலடி வழங்கியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம் தாவடியில் அமைந்துள்ள அவரது நினைவு தூபியில் நேற்று காலை 7 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அஞ்சலி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமரர் தர்மலிங்கத்தின் பேச்சுக்கள் தமிழ் மக்களின் உரிமைகளை, உணர்வுகளை பிரதி பலிப்பதாக அமைந்திருந்தது. அதனை நான் நேரிலும் கண்டிருக்கின்றேன். இன்று மாறுபட்ட சூழலில் இருக்கின்றோம். நீண்ட நெடிய யுத்தத்தின் பிற்பாடு பல லட்சம் மக்களை இழந்துள்ளோம். இவர்களில் போராளிகள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பட்டவர்களும் உள்ளார்கள். இந்த இழப்புக்களின் பிற்பாடு போராட்டம் தோல்வியில் முடிவடைந்திருக்கலாம்.

இராணுவம் வெற்றிபெற்று இருக்கலாம் இன்று புதிய அரசியல் சாசனம் ஒன்று வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்ட போது கூட வடகிழக்கு இணைக்கப்பட்டது. இதன் பின்னர் பல வருடங்கள் இணைந்தும் இருந்தது. ஆனால் தற்போது புதிய அரசியல் யாப்பு கொண்டுவரும் போது,

வடகிழக்கு இணைப்பை நிராகரித்து அதற்கு இடமே இல்லை. என ஜனாதிபதி பிரதமர் கூறியுள்ளனர். ஆகவே வடகிழக்கு இணைப்பு வேண்டும் என்பது அமிர்தலிங்கம், தர்மலிங்கம், தந்தை செல்வா காலத்தில் இருந்து வலியுறுத்தப்பட்டு வந்திருக்கின்றது. கிழக்கு கபளீகரம் செய்யப்பட்டு கொண்டு இருக்கின்றது. தற்போது வடக்கு மாகாணத்திற்கும் பரவி வந்துள்ளது.

ஆகவே வடகிழக்கு இணைய வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று புதிய அரசியளைப்பிலும் வடகிழக்கு இணைக்கப்படுமா? என்பது சந்தேகமே உள்ளது. சமஸ்டி உள்ளடக்கத்தில் சமஸ்டியாக உள்ளது என சுமந்திரன் கூறியுள்ளார். ஆனால் ஒற்றையாட்சி சிங்களத்தில் ஒர்ரையாட்சியாகவே இருந்தால் நீதிமன்றின் புரிதல்கள் எவ்வாறு அமையும்?

ஒற்றையாட்சி அற்ற அரசியல் சாசனம் என மூன்று மொழிகளும் வர வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையின்மை காணப்படுகின்றது. அரசியல் சாசன முயற்சிகளை இறுதி வரை முயற்சித்து பார்ப்பது. அது முடியாவிட்டால் கைவிடுவது என்று சொல்வது 1972 ஆம் ஆண்டு, 1978 ஆம் ஆண்டு அரசியல் சாசனங்களை நாங்கள் பார்த்தால் அது தந்தை செல்வாவால், தளபதி அமிர்தலிங்கத்தால் கையாளப்பட்டது. இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட பின்னர,

நாடு துண்டாடப்பட முடியாது என எத்தனையோ வாக்குறுதிகள் கொடுத்த பின்னரும், எங்கள் உரிமைகளை இவர்கள் வழங்கப்பட முயலவில்லை. இன்றைய அரசின் கீழ் இன பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதனை எப்படி தீர்க்க வேண்டும் என்பது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். ஆகவே இன்றைய காலகட்டம் என்பது,

தமிழ் மக்களை பொறுத்தவரையில் அரசியல் சாசனம் என்பது ஒரு விடிவை கொண்டுவரும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களில் 75 வீதமான விடயங்கள் உள்வாங்கப்பட்டால் ஓரளவு எமக்கு மக்களுடைய அபிலாசைகள் நிறைவேற்றப்படலாம். இல்லாது போனால் இந்த புதிய அரசியல் அமைப்பும் 1972 ஆம் ஆண்டு, 1978 ஆம் ஆண்டு அரசியல் சாசனங்கள் போன்று ஆகிவிடும் என்றார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
தனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து
இலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*