அனிதாவுக்காக குரல் கொடுத்துள்ள அமெரிக்க வாழ் சிறுமி!

மருத்துவராக வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மறைவுக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், அனிதாவுக்காக 9 வயதே ஆன அமெரிக்கா வாழ் தமிழ் சிறுமி ஒருவர் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இன்று எங்களது வீட்டுக்கு சிறப்பான நாள். எனது அப்பாவின் பிறந்தநாள், ஆனால், நாங்கள் அதை கொண்டாடவில்லை,

அனிதாவின் தந்தை பெயர் சண்முகம். எனது தந்தையின் பெயரும் சண்முகம். அதனால் தான் நாங்கள் என் தந்தையின் பிறந்தநாளை கொண்டாடவில்லை.

அனிதாவைப் பற்றி விமர்சிப்பவர்கள் அதை நிறுத்தி விட்டு, எதற்காக அவர் நீதிமன்றம் சென்றாரோ. அதற்காக நீங்களும் நீதிமன்றம் செல்லுங்கள்.

ஒரு உயிரை இழந்துள்ள இந்த நேரத்திலாவது, மற்ற மாணவர்களின் நலனைக் காக்க அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும். யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று பேசியுள்ளார்.

அனிதாவுக்கு நீதி கேட்டு தமிழகம் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் நேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்கா வாழ் தமிழ் சிறுமியின் இந்த காணொளி தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும்
இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கௌரவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
விஷாலும் தனிக்கட்சி துவங்கும் ஐடியாவில் உள்ளாராம். பல காலமாக இழுத்தடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வழியாக தனிக்கட்சி துவங்கி

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*