தமிழீழம் மலர்ந்தே தீரும் – வைகோ

இலங்கையில் தமிழர்கள், பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது. என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் எழுதியுள்ள “திரையுலகின் தவப்புதல்வன்” மற்றும் “இராமாயண ரகசியம்” ஆகிய நூல்களின் அறிமுக விழா சென்னை தி.நகர் சர் பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு இராமாயணம் மற்றும் கம்பராமாயணம் இரண்டையும் ஒப்பிட்டு ஆய்வுரை ஒன்றை வைகோ ஆற்றியுள்ளார். இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘‘இராமாயணத்தில் இராவணன் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கையில் தமிழர்கள், பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது. இலங்கையில் தமிழ் ஈழம் மலரும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழருவி மணியன், நடிகர்கள் சிவகுமார், மயில்சாமி, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப் புலிகளின் தலைமையால் மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிழித்தெறியப்பட்டதாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறிய
உத்தமபாளையம் துப்பாக்கி சூட்டுக்கு நடுவே வன்னிக்காட்டில் ஒரு மாதம் தங்கி இருந்த எனக்கு உயிர் பயம் கிடையாது என்று வைகோ
நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*