ஜகத் ஜயசூரியவை கைது செய்ய பிரித்தானியா நடவடிக்கை.

சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை, இன்டர்போல் பொலிஸார் ஊடாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

ஜகத் ஜயசூரியவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் அனைத்து கட்சி பாராளுமன்றக் குழு, ஜகத் ஜயசூரியை கைது செய்யுமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

லண்டனிலுள்ள விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவளிக்கும் பிரித்தானிய பாராளுமன்ற குழுவின் உறுப்பினர் ஸ்கலியினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதன் ஊடாகவே இலங்கையின் நல்லிணக்க செயற்பாடு வெற்றியளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சத்தியம் மற்றும் நீதியை தேடும் என்ற அரச சார்பற்ற அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், உயிரிழந்த மற்றும் காணாமல் போன குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்