புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் நாட்டு உணர்வு சிறப்பாக இருந்திருக்கும்.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கு தற்போது தேசிய உணர்வென்பது இல்லாமல் போய்விட்டது. ஆகவே புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என எண்ணத்தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நேர்மையானவர்களை தெரிவுசெய்து அவர்களை பதவியில் அமர்த்தினால் நாடு உரிய இலக்கை அடையும். இன்று இவ்வாறான நிலை இல்லாத காரணத்தினாலேயே கண்ணீர் விட்டு அழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநாயக்க தேரர்களையும், தலைவர்களையும் மோசமாக விமர்சனம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது சரியான விடயம் அல்ல என்றும் பெல்பொல விபஸ்ஸி தேரர் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்