மியன்மாரில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

மியன்மார் ரோகிங்யாவில் இடம் பெற்று வரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை கண்டித்து காத்தான்குடியில் இன்று (4.9.2017) திங்கட்கிழமை பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காத்தான்குடி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு முன்னாள் நடைபெற்றது.

மியன்மார் ரோகிங்யாவில் இடம் பெற்று வரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை கண்டிப்பதாகவும் இந்த படுகொலைகளை நிறுத்துமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உடனடியாக இதில் தலையிடுமாறும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுலோகங்களை தாங்கி மௌன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஆர்ப்பாட்ட இறுதியில் இலங்கை அரசாங்கம் மியன்மார் ரோகிங்யா முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமெனக் கூறி ஜனாதிபதிக்கு ஒரு மகஜரையும் ஐக்கிய நாடுகள் சபைக்கான மகஜர் ஒன்றையும் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் அவர்களிடம் காத்தான்குடி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா கையளித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்