தகுதி, திறமைகள் இருந்தும் வேலைவாய்ப்பில்லாமல் தவிக்கும் முன்னாள் போராளிகள்!

எமக்கு சகல தகுகள், திறமைகள் இருந்தும் வேலைவாய்ப்பு விடயத்திலும் ஏனைய விடயங்களிலும் தாம் எமது சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்ற நிலை தொடர்வதாக முன்னாள் போராளிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

அரச திணைக்களங்களில் கூட ஒரு தேவையை நிவர்த்தி செய்யப் போகின்ற போது வேண்டுமென்றே பல தடவைகள் எம்மை அலைக்கழிக்கும் நிலை காணப்படுவதாகவும் முன்பு கௌரத்துடன் வாழ்ந்த நாம் இன்று எமது சமூகத்தாலேயே மதிக்கப் படாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், எமக்கு பலதரப்பட்ட வேலை முன் அனுபவம், திறமைகள் இருக்கின்றபோதிலும் வேலை இல்லாத நிலையே தொடர்கின்றது. முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுப்பதற்கு எமது சமூகம் அஞ்சுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு எம் மீதான கீழ்த்தரமான பார்வை எமக்கு பெரும் உள தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் போராளிகளும் சமூகத்தில் சமமாக மதிக்கபட வேண்டும். ஏனையவர்களுக்கு கிடைக்கின்ற சகல உரிமைகளும் முன்னாள் போராளிகளுக்கும் கிடைக்க வேண்டும். முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கூட்டாக இணைத்து சமூக மயமான வேலைத்திட்டங்களை முன்னுரிமைப் படுத்த வேண்டும்.

அத்துடன் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை ஏற்றுவதில்லை. ஏற்றினாலும் பேருந்துகளில் கீழ்த்தரமாகவே நடத்துகின்றனர். இது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறையிட்டுள்ளோம். வட மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடவுள்ளோம் எனவும் முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்