மஹிந்த பாதையினில் மைத்திரி – ரணில் அரசும் பயணிக்கின்றது! – கு.குருபரன்

மஹிந்த அரசு எத்தகைய பாதையினில் பயணித்த தோ அதே பாதையினில் மைத்திரி – ரணில் அரசும் பயணிக்கின்றதென யாழ்.பல்கலைக்கழக சட்ட துறை விரிவுரையாளர் கு.குருபரன் தெரிவித்தார்.

தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறீலங்காவின் உத்தேச ஆசியலமைப்பு முயற்சியும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் யாழ்.நகரிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தினில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்று கொண்டிருக்கிறது.

அங்கு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றின் அறிக்கை கிடப்பினில் போடப்பட்டுவிட்டது. ரணில் தான் நியமித்த உப குழுவை கொண்டு தமக்கேதுவாக தயாரித்த அறிக்கையினை மட்டுமே இப்போது வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் உபகுழுக்களில் அங்கத்துவம் பெற்றிருந்த சித்தார்த்தன், டக்ளஸ் போன்றவர்கள் கூட இவ்வாறு ரணிலால் நியமிக்கப்பட்ட புதிய உப குழு பற்றியோ அதனது சிபார்சு பற்றியோ வாய் மூடி இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இலங்கை வடகிழக்கினில் ஒன்றையும் தெற்கில் இன்னொன்றையும் சர்வதேசத்திற்கு சொல்லிக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்