கிழக்கு படுகொலையின் 27வது ஆண்டு நிறைவு –நீதி கிடைக்காத நிலையில் தமிழ் சமூகம்

1990ஆம்ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.இனவழிப்பின் உச்சமாக மட்டக்களப்பு மாவட்டம் பல படுகொலைகளைக்கண்டுள்ளது. தென் தமிழீழத்தில் இருந்த தமிழ் தேசியத்தை இல்லாமல்செய்யயும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் உச்சம் காரணமாக கிழக்கில் இன்று தமிழர்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதன் ஒரு மிகப்பெரும் அவலமாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற படுகொலையினை கூறமுடியும். அந்த படுகொலை 1990-09-05 நடைபெற்று இன்று 27 ஆண்டுகளை பூர்த்திசெய்துள்ளது.

வந்தாறுமுலை தமிழ் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மிகப்பெரிய அரச திணைக்களமும் பொது நிறுவனமும் இல்லாததாலும் சிறிய ஆலயங்களை தவிர எல்லோர் கண்களில் அகப்பட்ட கட்டமும் மைதானமும் கொண்டதாக வந்தாறுமூலை கிழக்குப்பல்கலைக்கழகம் சுற்றியுள்ள அகதிகளை பாதுகாக்கும் இடமாக கருதி தஞ்சமடைந்தார்கள்.

இதற்கு முதல் பலதடவை இராணுவத்தினரும் ஊர்காவல் படையினரும் இக்கிராமங்களை சுற்றிவளைக்கும் போது கைத்தொலை பேசி இல்லாத காலமாகையால் யாராவது ஒருவர் இராணுவத்தினரிடம் பிரதான வீதிகளில் தப்பி வந்து தமது கிராமத்திற்கு தகவல் கொடுக்கும் போது ஒவ்வொரு கிராமமும் சில பேர் களுவண்கேணி கடற்கரைபக்கம் சிலபேர் சந்தனாறு மகிழவெட்டுவான் பக்கம் காடுகளில் தஞ்சமடைந்து தம்மை பாதுகாத்து இராணுவம் சென்ற பின் உரிய கிராமங்களைஅடைவது வழக்கம்.

இப்படி பலதடவை சுற்றி வளைப்பில் பத்து, இருபது பேரை கைது பண்ணி கொலை செய்து களைத்துப்போன இராணுவத்தினருக்கு ஒரே நேரத்தில் பல தமிழரை கொலை செய்வதற்கு ஏற்ற சூழல் கிடைக்கவில்லை. இதே காலத்தில் வந்தாறுமூலை சித்தாண்டி தமிழ் மக்களில் பலர் வயல்கள், மாடுகள், தோட்டம் செய்வதிலும் கற்றல்களிலும் முண்ணணியாகவும் இருந்தார்கள்.

இவ் கிராமங்களில் எளிமையான தோற்றங்களில் ஏறாவூர் முஸ்லிம் வியாபரிகள் சிறு கைத்தொழில் பொருட்களையும் விற்பதற்கு வந்து செல்வதால் இம் மக்கள் மீது பொறாமை, போட்டி உருவாகியது இவ் சந்தர்ப்பமும் இராணுவத்தினரும் கொலைவெறியும் ஆவலோடு காத்திருந்த பயனாக ஒவ்வொரு நாளும் ஓடிப்போய் களைத்த மக்கள் இனி ஓடமுடியாமல் தாம் பொது இடத்தில் தமது இனத்தவருடன் உறவினருடன் கூடியிருந்தால் இராணும் ஏதும் செய்யாது எனும்நம்பிக்கையாக இருந்த தமிழ் கிராம மக்களை அழிப்பதற்கு இன்றைய தினத்தை தெரிவு செய்தார்கள்.

தமிழருடன் ஒரே தாய் பிள்ளைகள் போல் நட்புறவுடன் பழகிய காடையர்கள் தமக்கு தொழில் போட்டி, அரச உத்தியோகம் கிடைக்காத ஆதங்கம், வயல்கள், மாடுகள் பட்டி இல்லாத குற்ற உணர்வு போன்றவற்றையும் இக்கொலையில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் அடையாளம் காட்ட. ஒவ்வொரு வாட்ட சாட்டமான தமிழ் இளைஞர்களையும் கைது செய்து இலங்கை போக்குவரத்து பேருந்தில்156 மேற்பட்டோர் கொண்டு செல்லப்பட்டார்கள். சென்றவர்களை தேடி ஒவ்வொரு இராணுவ முகாம் தேடியலைந்த பலரும் காணாமல் போனார்கள்.நான்கு நாட்கள் பின் நாவலடி சந்தியிலுள்ள கரும்புத்தோட்டத்தில் பல சடலம் எரியூட்டப்பட்டு இருந்தமை இதில் கைது செய்யப்பட்டவர்களாகதான் இருந்ததாக நம்பப்பட்டது.

இதுவரை எவராவது வீடு திரும்புவார்கள் என்று எதிர் பார்த்து காத்திருந்து இன்றோடு 27வருடமாகியும் வரவில்லை.அதற்கான நீதியும் இதுவரையில் கிடைக்கவில்லை.கிழக்கின் கருவறுப்புகளின் துளியே இது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்