தொடர்மோதல்… அ.தி.மு.க அலுவலகம் சீல்வைப்பு

முதலமைச்சர் பழனிசாமி தரப்பினருக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக நன்னிலம் அ.தி.மு.க அலுவலகத்திற்கு கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று தினகரன் தரப்பு மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் கட்டுப்பாட்டில், அந்த அ.தி.மு.க அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. எனவே தினகரனால் நியமிக்கப்பட்ட மாவட்டச்செயலாளர் வருகை தந்துள்ளதை அறிந்த அமைச்சர் காமராஜின் ஆதரவாளர்கள் உடனே கட்சி அலுவகத்தில் திரண்டனர். இதனால் இருதரப்பிற்கு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து அங்கு குவிந்த காவல்துறையினர், தொடர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இறுதி வரையிலும் சமரசம் எட்டப்படாமல் பதற்றமான சூழலே தொடர்ந்தது. இதையடுத்து மோதலால் தொடர்ந்த பதற்றத்தை அடுத்து, நன்னிலம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்கு கோட்டாட்சியர் சீல்வைத்து மூடினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்