பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புபெற்ற செல்வச் சந்நிதியான் தேர் திருவிழா ஆரம்பம்!

ஈழத்தமிழர்களின் குலதெய்வமாக விளங்கி வரும் முருகன் ஆலயங்களில் தனிச்சிறப்பு பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலையத்தின் தேர் திருவிழா பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ ஆரம்பித்துள்ளது.

ஈழத்துச் திருச்செந்தூர் என்று போற்றப்படும் செல்வச் சந்நிதி முருகன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று பல்லாயிரம் பக்தர்களின் அரோகரா கோசங்கள் பேரொலியா எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

பிராமணர்கள் அல்லாதவர்களால் பூசை வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறும் தனிச்சிறப்புப் பெற்ற திருத்தலமாக விளங்கும் செல்வச் சந்நிதியில் எழுந்தருளி அருள்பாளித்துவரும் முருகப்பெருமான் தேரேறி வந்து அருளாட்சி செய்யும் அழகை காண ஈழத்திரு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் நாடி வந்த பக்தர்களின் பரவசத்தின் நடுவே தேர் திருவிழா பக்தி பூர்வமாக நடைபெற்று வருகிறது.

காவடிகள் எடுத்தும் அங்கப்பிரதட்சணம் செய்தும் தமது நேர்த்திக் கடன்களை பக்தர்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்க சிதறு தேங்காய்கள் உடைபட கற்பூர ஆராத்திகள் சுடர்விட அழகன் முருகன் தேரேறி வருகின்ற அழகே தனி அழகுதான். இந்த பக்திப் பேரழகை காண கோடி கண்கள் வேண்டும்.

உலகெங்கும் பரவி வாழ்ந்துவரும் சைவப் பெருமக்களாகிய ஈழதேசம் வாசகர்களும் செல்வச் சந்நிதியான் அருளை பெற்று நல்வாழ்வு பெறுக.

ஓம் முருகா! ஓம் முருகா! ஓம் முருகா!

செய்தி மற்றும் புகைப்படங்கள்-காணொளி ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்.

தொடர்டர்புடைய செய்திகள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா அவர்கள் 5.02.2018

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*