எதற்கும் அஞ்சவேண்டாம்‘‘நான் கூடவே இருப்பேன்’’ ஜெகத்­துக்கு கோத்தா ஆறுதல்

“எதற்­கும் அஞ்­ச­வேண்­டாம். போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு முகம்­கொ­டுக்க வேண்­டி­வ­ரின் உங்­க­ளு­டன் நான் இருப்­பேன்” என்று முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு ஆறு­தல் கூறி­யுள்­ளார் பாது­காப்பு அமைச்­சின் முன்­னாள் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச.

பிரே­சி­லுக்­கான இலங்­கைத் தூது­வ­ராக செயற்­பட்ட ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக பிரே­சில் நீதி­மன்­றில் போர்க்­குற்ற விசா­ரணை வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அவ­ருக்­குச் சார்­பாக பல­ரும் ஆத­ர­வுக் குரல் எழுப்பி வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யி­லேயே ஜெகத் ஜய­சூ­ரி­யவை அலை­பே­சி­மூ­லம் தொடர்பு கொண்ட முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச, பன்­னாட்டு மட்­டத்­தில் விசா­ரணை நடத்­த­வேண்­டிய நிலை ஏற்­ப­டு­மா­னால் இறு­திப்­போ­ரின் போது பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர் பத­வியை வகித்­த­வன் என்ற வகை­யில் உங்­க­ளுக்கு சார்­பா­கச் செயற்­ப­டு­வேன்.

அத்­து­டன், பன்­னாட்­டுச் சட்ட திட்­டங்­கள் தொடர்­பி­லும் ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­ப­டும் – என்று தெரி­வித்­துள்­ளார். ஜெகத் ஜய­சூ­ரிய குற்­ற­மி­ழைப்­ப­தற்கு முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் ஆத­ரவு இருந்­தி­ருக்க வேண்­டும் என்று முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும் அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்