20 ஆவது சட்ட வரைவை நிராகரித்தது வட மாகாண சபை

கொழும்பு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது சட்ட வரைபை வடக்கு மாகாண சபை இன்று நிராகரித்தது.

வடக்கு மாகாண சபை அமர்வு கைதடியில் உள்ள சபை மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அதில் 20 ஆவது சட்ட வரைவு தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது.

சட்ட வரைவில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்படும் என்று சபையில் தெரிவிக்கப்பட்டது

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைவை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் அதனை நிராகரிப்பதாக சபையில் தெரிவிக்கப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்