200வது நாளை எட்டிய உறவுகளின் போராட்டம் – கிளிநொச்சியில்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 200வது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.

கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இரவு பகலாக பல பொய் வாக்குறுதிகளின் மத்தியிலும் தீரிவின்றி தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்