சாலை கடற்பரப்பில் தமிழ் மீனவர்களின் படகை மோதி மூழ்கடித்த சிங்கள மீனவர்கள்!

நேற்று அதிகாலை முல்லைத்தீவு சாலை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களின் படகினை சிங்கள மீனவர்கள் மோதி கடலில் மூழ்கடித்துள்ளனர். இச்சம்பவத்தை வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

நேற்று அதிகாலை சாலை கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிங்கள மீனவர்களின் படகொன்று குறித்த படகை மோதித்தள்ளியது.

இதனால் படகு கடுமையாகச் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளது. அந்தப் படகில் பயணித்த இரண்டு மீனவர்களும் உயிருக்குப் போராடிய நிலையில் சக மீனவர்களின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான விஷமத்தனமான செயலால் மீனவர்களின் உயிரைப் பறிக்க நினைத்துள்ளனர். இந்தச் செயலைச் செய்த படகினை அப்பகுதியில் நின்ற ஏனைய மீனவர்கள் துரத்திச் சென்று அவர்கள் யார் என அடையாளம் கண்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக மீனவர்கள் காவல்துறையினருக்கும், வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனுக்கும் தெரியப்படுத்தியதையிட்டு, வடமாகாணசபை உறுப்பினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சருக்கு அறிக்கையொன்றும் மாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் கையளிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்