பாடசாலை மாணவி கிருசாந்தியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு செம்மணியில் நடைபெற்றது!

1996ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாம் 7ஆம் நாள் கல்விப் பொது உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி கிருசாந்தி சிறிலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 21ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் செம்மணி மைதானத்தில் நடைபெற்றது.

கைதுசெய்யப்பட்ட கிருசாந்தி ஒன்பது இராணுவத்தினர், இரண்டு காவல்துறையினர் உட்பட பதினொருபேரால் கூட்டு பாலியல் வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டபின்னர் அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.

குறித்த மாணவியைத் தேடிச் சென்ற தாய் இராசம்மா, தம்பி பிரணவன் மற்றும் அயல் வீட்டுக்காரரான சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைவிட, சிறிலங்கா இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகளும் செம்மணியில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கிருசாந்தியின் நினைவுநாளான இன்று செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து உறவுகளும் நினைவுகூரப்பட்டு அவர்களுக்கும்அஞ்சலி இடம்பெற்றது.  

About இலக்கியன்

மறுமொழி இடவும்